விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இசையமைத்துள்ள 'காளி' திரைப்படம் இன்று (மே 18) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரஜினியின் வெற்றிப்படத் தலைப்புகளுக்கு தனி ஈர்ப்பு உண்டு. அந்த வகையில் விஜய் ஆண்டனியின் இந்த 'காளி', முதல் தோற்றம் (ஃபர்ஸ்ட் லுக்) வெளியான நாளிலிருந்தே தனி கவனம் பெற்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து டீஸர், ட்ரெய்லர், 'அரும்பே' பாடல், படத்தின் முதல் 7 நிமிட காட்சி என ஒவ்வொன்றாக வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. டாக்டருக்கு படித்துவிட்டு, அமெரிக்காவில் மிகப் பெரிய மருத்துவமனையின் உரிமையாளராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு விசித்திரமான கனவு வருகிறது. அக்கனவில் கொடிய பாம்பு, முரட்டுக்காளை, கதறி அலறும் ஒரு சிறுவன் தோன்றி மிரட்ட, அச்சமும், குழப்பமும் அடைகிறார் விஜய் ஆண்டனி. தனது வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவம் தான் இப்படி கனவாக வந்து தொல்லை கொடுக்கிறது என்ற முடிவுக்க...