சூர்யா படத்தில் புக் ஆகிறார் நடிகை வனமகன் சயிஷா
சென்னை: இவர்தான்... இவர்தான் கதாநாயகி என்று தெரிய வந்துள்ளது. எந்த படத்திற்கு தெரியுங்களா?
தற்போது NBK படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிச்சு இருந்தாங்க. ஆனால் ஹீரோயின் யார் என்று சொல்லவே இல்லை.
தற்போது கே.வி.ஆனந்த் வனமகன் படத்தில் நடித்திருந்த சயிஷாவை அணுகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment