இனி நடிக்க போவதில்லை என்று கீர்த்தி சுரேஷ் முடிவு?

ஹைதராபாத்: இனி யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
மரத்தை சுற்றி டான்ஸ் ஆடிவிட்டு செல்லத் தான் கீர்த்தி சுரேஷ் லாயக்கு. அவருக்கு நடிக்க வராது என்று கிண்டல் செய்தவர்களை நடிகையர் திலகம் படம் மூலம் மிரள வைத்துள்ளார் கீர்த்தி.
படத்தை பார்த்த அனைவரும் கீர்த்தியை தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்



கீர்த்தி
இந்த கீர்த்தி சுரேஷுக்குள் இப்படி ஒரு திறமை இருந்துள்ளதை நாம் பார்க்காமல் போய்விட்டோமே. நாக் அஸ்வின் கீர்த்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.



படங்கள்
வாழ்க்கை வரலாற்று படம் தான் கீர்த்தி சுரேஷுக்கு பெயரும் புகுழும் வாங்கிக் கொடுத்துள்ளது. ஆனால் இனிமேல் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி.

நல்ல விஷயம்
வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பில் அசத்திய பிறகு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளீர்கள் கீர்த்தி சுரேஷ்? வாழ்க்கை வரலாற்று படங்களில் தொடர்ந்து நடித்தால் அதுக்கு மட்டுமே தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறாரோ என்னவோ?


பாராட்டு
கீர்த்தி சுரேஷுக்கு செல்லும் இடமெல்லாம் பாராட்டாக உள்ளது. திரைத்துறையில் உள்ள ஜாம்பவான்கள் கூட கீர்த்தியை நேரில் அழைத்து பாராட்டுகிறார்கள். இதை பார்த்து அவரது குடும்பத்தார் பெருமை அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி எடியூரப்பா நடவடிக்கை

தனுஷுக்காக அதை செய்த சாய்பல்லவி

புது கெட்டெப்பில் தல அஜீத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.